×

ஆஷஸ் 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதையடுதது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3வது நாளான நேற்று 325 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து 91 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன் எடுத்துள்ளது. கவாஜா 58, ஸ்மித் 6 ரன்னில் களத்தில் இருந்தனர். ஆஸி. இதுவரை 221 ரன் முன்னிலை பெற்று வலுவாக உள்ள நிலையில் 4வது நாளான இன்று தொடர்ந்து பேட் செய்து வருகிறது.

The post ஆஷஸ் 2வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Ashes ,Australia ,London ,UK ,Lord's Ground ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை