×

ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தல்: கையெழுத்து இயக்கம் தொடங்கிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றது முதல் அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட ஆர்.என்.ரவி சற்று நேரத்தில் அந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுப்பினார்.

தமக்கு அதிகாரம் இல்லாத விவகாரங்களில் ஆளுநர் உத்தரவு பிறப்பிப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். இந்நிலையில் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். ஆளுநரின் நடவடிக்கைகள் அனைத்தும் கேலி கூத்தாக இருப்பதாக வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநருக்கு எதிரான பரப்புரையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வழக்கறிஞர்கள் கையெழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவும் உயர்நீதிமன்ற வாக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும். தவறும் பட்சத்தில் ஒன்றிய அரசு அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரிய அறையில் பயிற்சி பட்டறை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிட பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முனிசாலை பகுதியில் பிரபல பின்னணி பாடகர் சௌந்தர்ராஜனுக்கு வெண்கல சிலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு அதிகாரம் இல்லாத விவகாரத்தில் ஆளுநர் மூக்கை நுழைப்பதாக சாடினார். அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும், மரபுகளையும் தொடர்ந்து மீறி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியில் நீடிக்கும்

தகுதியை இழந்து விட்டார் என மதிமுக பொது செயலாளர் வைகோ சாடியுள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் குழப்பம் நுழைவுக்கு முனைந்து வரும் ஆளுநர். உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக நடத்திவரும் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் பேராதரவை வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 1 கோடிக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்று குடியரசு தலைவரிடம் ஒப்படைப்போம் என்றும் வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப்பெற வலியுறுத்தல்: கையெழுத்து இயக்கம் தொடங்கிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. ,Rawhi Union Government ,Chennai ,Chennai High Court ,Rawi ,Governor of ,Tamil ,Nadu ,Governor ,R. N.N. ,Union Government ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...