×

அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எழும்பூரில் தனியார் வளாகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வேண்டுமென்றால் நம்முடன் பாஜக வரட்டும்; அவர்கள் தயவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை; பகைத்துக் கொள்ளவும் வேண்டாம். நமக்கு தொண்டர்கள் பலம் உள்ளது; தினகரன் நமக்கு துணையாக தோழமையாக செயல்பட உள்ளார். சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; விரைவில் அழைப்பு வரும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

The post அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது ஆளுநருக்கே தெரியவில்லை: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Panruti Ramachandran ,panrutti ramachandran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...