×

சிதம்பரம் நடராஜர் கோயில் மக்களுக்கு சொந்தமானது: மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எச்சரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே ராசன் பரிந்துரையின் அடிப்படையில் சிறப்பு சட்டம் இயற்றி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் முழுக்க முழுக்க மக்களுக்கு சொந்தமானது என்று முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டினார்.

தீட்சிதர்கள் கோயில் அறங்காவலர்கள் போல் செயல்பட்டு வருவதாகவும் சிதம்பரம் கோயில் சில தீட்சிதர்களால் சர்ச்சைக்குரிய இடமாக மாற்றப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மத சடங்குகளில் தமிழ்நாடு அரசு தலையிடுவதாக தீட்சிதர்களுக்கு பாஜகவினரும் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார். சிதம்பரம் கோயிலை போல் அனைத்து கோவில்களையும் சர்ச்சைக்குரிய இடமாக மாற்ற முயற்சி நடைபெற்று வருவதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எச்சரித்தார். சிதம்பரம் கோயிலை சரியான கட்டமைப்புடன் பாதுகாக்க வேண்டும் என்றும் அரசுக்கு மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார்.

 

The post சிதம்பரம் நடராஜர் கோயில் மக்களுக்கு சொந்தமானது: மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Nataraja Temple ,Senior ,Vanchinathan Warns ,Justice ,AK Rasan ,Hindu Religious Endowment Department ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...