×

விராலிமலை அருகே பூதகுடியில் சுய உதவி குழு நிர்வகிக்கும் செங்கல் தயாரிக்கும் மையம்

*ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆய்வு

விராலிமலை : விராலிமலை அருகே சுய உதவிகுழு தயாரித்து விற்பனை செய்து வரும் செங்கல் கற்கள் தயாரிப்பு நிலையத்தைதமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் மந்திராச்சலம் பார்வையிட்டு கற்கள் தரத்தை பரிசோதனை செய்து உற்பத்தியை அதிகப்படுத்த அறிவுரை வழங்கினார்.விராலிமலை அருகே உள்ளது பூதகுடி ஊராட்சி இங்கு செயல்பட்டு வரும் முத்துமாரியம்மன் சுய உதவி குழுவின் தலைவியாக வசந்தா உள்ளார் இக்குழுவில் உறுப்பினர்களாக 12 பேர் உள்ளனர்.

இவர்கள் ஊராட்சி பகுதி ஒதுக்கு புறத்தில் ஷெட் அமைத்து செங்கல் கற்கள் சுய உதவி குழு மூலம் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் செங்கல் கற்களுக்கு தரம் அதிகம் எப்படி என்றால் இவர்கள் செங்கல் கற்களை சூளையில் வைத்து தகதக அனலில் வேகவைப்பதில்லை களிமண்ணுடன் சிமென்ட் உள்ளிட்ட சில மூல பொருட்கள் மட்டும் சேர்க்கப்பட்டு அதை அச்சில் ஏற்றி வெயிலில் உலரவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் பல நாட்கள் மூழ்கவைத்து நன்றாக ஊறிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு செங்கல் விலை ரூ.5.50 மட்டுமே நிர்ணயம் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் செங்கல் தயாரிப்பதற்கு முக்கிய தேவையில் ஒன்று மின்சாரம் இதில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கற்கள் தயாரிக்கு முடியும் என்ற சூழலில் தற்போது 2 ஆயிரத்து 500 கற்கள் மட்டுமே தயாரிக்க முடிகிறது என்கின்றனர் சுய உதவிகுழு பெண்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மந்திராசலம் முத்துமாரியம்மன் சுய உதவி குழு தயாரிக்கும் பூதகுடி ஊராட்சியில் இயங்கி வரும் செங்கல் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து செங்கல் கற்களின் தரத்தை பரிசோதித்த உதவி இயக்குநர் சுயஉதவி குழுவிற்கு பாராட்டு தெரிவித்து உற்பத்தியை அதிகப்படுத்த பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

நிகழ்வின் போது மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, ஏபிஓ ஜான்லிங்டன், கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி முருகேசன், வட்டார திட்ட இயக்க மேலாளர் அழகு மீனா, ஒருங்கிணைப்பாளர் லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post விராலிமலை அருகே பூதகுடியில் சுய உதவி குழு நிர்வகிக்கும் செங்கல் தயாரிக்கும் மையம் appeared first on Dinakaran.

Tags : Boothagudi ,Viralimalai ,Boothakudi ,Dinakaran ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் விசாக திருவிழா விடையாற்றியுடன் நிறைவு