×

ஆளுநர் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்: சு.வெங்கடேசன் சாடல்

சென்னை: ஆளுநர் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தன் முடிவை ஆளுநர் திரும்பப் பெறுகிறார். ஒரு அறிவிப்பின் மூலம் அமைச்சரை நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு யார் கொடுத்தது?என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் ரவி தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்: சு.வெங்கடேசன் சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Su Venkatesan Chatal ,CHENNAI ,Governor ,Ravi ,Su Venkatesan ,
× RELATED இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை...