×

பெண்களின் திருமண வயதை 16 ஆக குறைக்க வேண்டும் :ஒன்றிய அரசுக்கு குவாலியர் உயர்நீதிமன்றம் பரிந்துரை

போபால் : பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு குவாலியர் உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் ஜாதவ் என்ற சிறுவன் தாக்கல் செய்த மனு குவாலியர் உயர்நீதிமன்ற நீதிபதி தீபக் குமார் அகர்வால் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவி தரப்பு வழக்கறிஞர், கோச்சிங் வகுப்புக்கு வந்த சக மாணவியை சிறுவன் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார்.

அதனை செல்போனில் படம் பிடித்து மாணவியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததால் மாணவி கர்ப்பம் ஆனதாக கூறினார்.மாணவி மைனர் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி 14 வயதிலேயே சிறுவர்களும் சிறுமிகளும் பருவம் அடைந்துவிடுவதாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாக அனைத்து விழிப்புணர்வுகளையும் பெற்று முதிர்ச்சி அடைந்து விடுவதாகவும் கூறினார்.

இதனால் இரு பாலினத்தவரும் ஒருவர் பால் மற்றொருவர் ஈர்க்கப்படுவதால் தவறுகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். ஆனால் 18 வயது கீழ் உள்ள சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக மாற்றப்படுவதாகவும் பருவ வயது சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்றும் அவர் தெரிவித்தார். எனவே பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்றும் இதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

The post பெண்களின் திருமண வயதை 16 ஆக குறைக்க வேண்டும் :ஒன்றிய அரசுக்கு குவாலியர் உயர்நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Gwalior High Court ,Union Govt. Bhopal ,Union ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை