×

சாதாரண வாழ்வை வாழ்ந்து சாவதை விட வாழ்வுக்கு பிறகும் புகழீட்டி செல்ல வேண்டும்

*மாவட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேச்சு

திருத்துறைப்பூண்டி : ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து மடிந்து போவதை விட, அதற்கு ஒரு படி மேலான வாழ்வை வாழ்ந்து வாழ்வுக்குப் பிறகும் புகழீட்டி செல்ல வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், நல் நூலகருமான ஆசைத்தம்பி பேசினார்.திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், நல் நூலகருமான ஆசைத்தம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அவர் வெற்றியின் ரகசியங்கள் என்ற தலைப்பில் பேசுகையில், ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து மடிந்து போவதை விட, அதற்கு ஒரு படி மேலான வாழ்வை வாழ்ந்து வாழ்வுக்குப் பிறகும் புகழீட்டி செல்ல வேண்டும். அதற்கு 6 முத்தான பழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக நேரம் தவறாமை, கவனிக்கும் திறன், நேர்மறை எண்ணங்கள், பெரியோரை பின்பற்றுதல், புத்தக வாசிப்பு பழக்கங்களை உருவாக்கிக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.குடும்ப வறுமையில் இருந்து மீள உலகம் உங்களை தெரிந்து கொள்ள நல்ல வேலை நல்ல ஊதியம் கிடைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் தனி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மற்ற மாணவ, மாணவிகளை விட நாம் அறிவில் மேலோங்கி என்றால் மட்டுமே நல்ல வேலையை பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் போட்டி தேர்வு என்று ஆகிவிட்டது. எனவே புத்தக வாசிப்பையும், பள்ளிக்கூட படிப்போடு சேர்த்து வாசித்து வரவேண்டும். புகழ் உச்சிக்கு சென்ற தலைவர்கள் அனைவரும் புத்தக வாசிப்பால் தான் சமுதாயத்தில் உயர்வு பெற்று விளங்கினர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தலைமை யாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சங்க செயலாளர் முகம்மது ரபீக் நன்றி கூறினார்.இதில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், பாரதிதாசன், சிவராமன், விஜயகுமார் ,தமிழ்செல்வி, மில்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதுகலை தமிழாசிரியர் பாஸ்கரன் நூல்களைப் படி என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். இடைவேளையில் மாணவர்களுக்கு இயற்கையாய் விளைந்த மாம்பழங்கள் மற்றும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

The post சாதாரண வாழ்வை வாழ்ந்து சாவதை விட வாழ்வுக்கு பிறகும் புகழீட்டி செல்ல வேண்டும் appeared first on Dinakaran.

Tags : District Reading ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி 10ஆக உயர்வு