×

தமிழக உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை முன்னாள் இயக்குநர் பணியிடை நீக்கம்..!!

சென்னை: தமிழக உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை முன்னாள் இயக்குநர் வேல்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெறவிருந்த உள்ளாட்சி தணிக்கைத்துறை சிறப்பு பணி அலுவலரை சஸ்பெண்ட் செய்து நிதித்துறை செயலர் ஆணையிட்டுள்ளார். பாரதியார் பல்கலை. நிதி அலுவலராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை புகாரில் சிக்கிய நிலையில் வேல்சாமியை சஸ்பெண்ட் செய்து நிதித்துறை செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post தமிழக உள்ளாட்சி நிதித் தணிக்கை துறை முன்னாள் இயக்குநர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Local Financial Audit Department ,Chennai ,Tamil Nadu Local Finance Audit Department ,Velsamy ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...