×

மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உடல் கருகி பலி… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மும்பை : மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மாலில் இருந்து புனே நோக்கி நேற்று இரவு 33 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. நள்ளிரவு புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து தீ பிடித்து எரிந்தது.ஒரு சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

அதனால் பற்றி எறிந்த தீயில் சிக்கி 25 பயணிகள் பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தனர். பேருந்து எறிவதை கண்டு நிகழ்விடத்திற்கு வந்த அருகில் உள்ள கிராம மக்கள், 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பேருந்தில் இருந்து உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புல்தானா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

The post மராட்டியத்தில் ஓடும் பேருந்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் பரிதாபமாக உடல் கருகி பலி… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Maratham ,mumbai ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...