×

கோபி அருகே தீயணைப்பு துறை சார்பில் பருவமழை மீட்பு ஒத்திகை

 

கோபி, ஜூலை 1: கோபி கரட்டடிபாளையம் வாய்க்காலில் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் முன்னிலையில், பருவமழை மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீர் நிலைகளில் அடித்து செல்லப்படுபவர்களை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி கோபி தீயணைப்புத்துறை சார்பில், கரட்டடிபாளையம்- பங்களாபுதூர் சாலையோரம் உள்ள வாய்க்காலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் முருகன், மாதப்பன், கோபாலகிருஷ்ணன், திருமலைசாமி, சிசில்குமார், மயில்சாமி, ராமச்சந்திர மூர்த்தி, வெங்கடேஷ், குருமூர்த்தி, தேவராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாய்க்காலில் தவறி விழுந்தவரை மீட்டு முதலுதவி அளிக்கும் நிகழ்ச்சியினை பொதுமக்கள் முன்னிலையில் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

The post கோபி அருகே தீயணைப்பு துறை சார்பில் பருவமழை மீட்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Gobi ,Bear ,Palayam Mouakkal ,Fire Department ,Dinakaran ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு