×

சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

 

அவிநாசி, ஜூலை1: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மின் கோட்டத்திற்குட்பட்ட, சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம், கடந்த 50 ஆண்டுக்கு மேலாக, சேவூரின் மையப்பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், பாப்பாங்குளம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சேவூர் துணை மின் நிலையத்திற்கு (வடக்கு பகுதி) கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் துறையை சார்ந்த மின்நுகர்வோரும், (பனியன் கம்பெனி, விசைத்தறி, இயந்திர பணிமனை) 8 ஆயிரத்திற்கு அதிகமான வீட்டு இணைப்புகளும் கொண்ட வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்கள் புதிய மின்இணைப்பு பெறுவதற்கும், மின்கட்டணம் செலுத்துவதற்கும், மின்சார சம்பந்தமான புகார் போன்றவை தெரியப்படுத்த சேவூரில் அலுவலகம் இருந்ததால், மின் நுகர்வோர் சென்று பயனடைந்து வந்தனர்.

கடந்த 50 ஆண்டுக்கு மேலாக, சேவூரின் மையப்பகுதியில், இயங்கி வந்த தெற்கு மின்வாரிய அலுவலகம், 3 கி.மீ தொலைவில் உள்ள பாப்பாங்குளம் ஊராட்சியில் இடியும் நிலையில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி இடம் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இங்கு தான் அலுவலகம் செயல்படுகிறது. இப்பகுதிக்கு பஸ் வசதி குறைவு. சேவூரின் மையப்பகுதியில் இருந்ததால், மின் நுகர்வோர் விரைவாக மின்கட்டணம் செலுத்தி வந்தனர். வீட்டில் உள்ள பெண்களும் நடந்தே சென்று எளிதாக மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். தற்போது பாப்பான்குளம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்துள்ளதால், பணம் செலுத்துவதற்கும், புகார்களை தெரிவிப்பதற்கும், இருசக்கர வாகனம் தேவைப்படுகிறது. இதனால் கூடுதல் செலவுகள் ஆகிறது. இதனால், மின் நுகர்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

The post சேவூர் தெற்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Sewur South Power Board Office ,Avinasi ,Sevur South Power Board ,Tirupur ,Dinakaran ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...