×

துறையூர் ஒன்றியகுழு சாதாரண கூட்டம்

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய சேர்மன் சரண்யா தலைமையில் நடைபெற்றது. துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியகுழு தலைவர் சரண்யா தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் புவனேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஒன்றிய அலுவலக வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் சுபாஷ், ராஜேந்திரன், முருகேசன், பேபிலெனின், சரசு, மகேஸ்வரி துரைராஜ், சரண்யா, சுப்பிரமணியன், சதீஷ்குமார், ரூபினி, புனிதா, அசோகன், சிவக்குமார், இந்துமதி, சின்னம்மாள், லலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post துறையூர் ஒன்றியகுழு சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharayur union ,Thariyaur ,Trichy district ,Saranya ,Dariyur Panchayat Union ,Dariyur Union Committee ,Ordinary Meeting ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில் நாளை...