×

வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் விநியோகம்

விராலிமலை: விராலிமலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்று விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். விராலிமலை வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP) கடந்த 2020-2021ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பண்ணைக் கருவிகள் (மண்வெட்டி-1 எண், கடப்பாறை-1எண், களைக்கொத்து-1எண், இரும்புச்சட்டி-1எண், கதிர்அரிவாள்- 2 எண்கள், கொண்ட தொகுப்பு), பேட்டரி மருந்து தெளிப்பான், திரவ உயிரியல் உரங்கள் ஆகிய இடுபொருட்கள் மானிய விலையில் வேளாண் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடுபொருட்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம பஞ்சாயத்துகளான மண்டையூர்,கொடும்பாலூர், இராஜகிரி, நம்பம்பட்டி, ராஜாளிப்பட்டி, கத்துலூர், பூதகுடி, விராலூர், கோங்குடிபட்டி, மருதம்பட்டி, லெட்சுமணம்பட்டி, விருதாப்பட்டி, வானதிராயன்பட்டி, கோமங்கலம், வெம்மணி, விளாப்பட்டி, மதயானைப்பட்டி, பாக்குடி, ஆவூர், குன்னத்தூர், தேராவூர், கசவனூர், விராலிமலை, மீனவேலி, பொய்யாமணி, நீர்பழனி, பாலாண்டாம்பட்டி, விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.இதர பஞ்சாயத்துகளை சேர்ந்த விவசாயிகளுக்கும் ஒதுக்கீடு,முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பண்ணைக் கருவிகள், திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையிலும், பேட்டரி மருந்து தெளிப்பான்-ரூ.2 ஆயிரத்திற்கு மானிய விலையிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்ட வேளாண் இடு பொருட்கள் மானியத்தில் பெற்றிட உழவன் செயலியில் விவசாயிகள் முன்பதிவு செய்தும், உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பரிந்துரை பெற்றும் வேளாண் இடு பொருட்களை மானிய விலையில் பெற்று பயனடையலாம் என்றும் மேலும் விரிவான விபரங்களுக்கு அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் வேளாண் இடு பொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...