×

மயிலாடுதுறை அருகே அரிவேளூர் கிராமத்தில் சுயம்புநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா அரிவேளூர் என்னும் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது. அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயம், புனரமைக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு, செம்மையான திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய நிலையில், நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தனர். பின்னர், விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகாவிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர். நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post மயிலாடுதுறை அருகே அரிவேளூர் கிராமத்தில் சுயம்புநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Suyambunathar Swamy Temple ,Arivelur village ,Mayiladuthurai ,Kutthalam ,Anandavalli ,Sametha Swayambunatha Swamy Temple ,Kutthalam Taluk ,Mayiladuthurai District ,Swayambunathar Swamy Temple ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...