×

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

செம்பனார்கோயில், ஜூலை1: தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் ஒன்றிய அரசு கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த சாகர் கவாச் எனும் ஒத்திகை நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியிலும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கடலோர காவல் நிலைய காவலர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய காவலர்கள் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி நிஷா தலைமையில், டிஎஸ்பி கலைகதிரவன், இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்தர், சிங்காரவேல் ஆகியோர் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடல் பகுதியிலும், கடற்கரையோர பகுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் அது குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்குமாறு கடலோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், கடலுக்குச் சென்று மீன்பிடித்து வரும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

The post தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sagar Gavach ,Tharangambadi beach ,Sembanarkoil ,Tharangambadi ,Mumbai ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை