×

மதுபாட்டில் விற்றவர் கைது

 

கம்பம், ஜூலை 1: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கம் மகன் பாலமுருகன் (30). இவர் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அவரது வீட்டில் எஸ்ஐ முனியம்மாள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மறைவில் 8 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், பாலமுருகனை கைது செய்தனர்.

The post மதுபாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kampam ,Balamurugan ,Kamayakaundanpatti Manthaiyamman ,Dinakaran ,
× RELATED மின் வயர்கள் திருட்டு