×

ஜூலை 3ல் நான் முதல்வன் திட்ட முகாம்

 

சிவகங்கை, ஜூலை 1: காரைக்குடி, அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி முகாம், ஜூலை 3 அன்று நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு-தேர்ச்சி, தோல்வியுற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேராத மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு வழிகாட்டுதலுக்காக தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி என்ற முகாம் காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜூலை 3 அன்று காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

உயர் கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம். முழுமையான விபரங்களை சிவகங்கை, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகத்திலோ, அல்லது 04575 290625 என்ற தொலை பேசி எண் 82200 08486 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஜூலை 3ல் நான் முதல்வன் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Alagappa College of Arts and Science ,Karaikudi ,Nan Muluvan ,Nan Muluvan Project ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...