×

திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்

திண்டுக்கல், ஜூலை 1: திண்டுக்கல்லில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆணையர் மகேஸ்வரி உத்தரவின்படி நேற்று நகரமைப்பு செயற்பொறியாளர் நாராயணன், உதவிஅலுவலர் வள்ளியம்மை, இளநிலை பொறியாளர்கள் தன்ராஜ், வெங்கடேஷ், சாந்தி, சந்திரா மற்றும் தெற்கு போலீசார் இணைந்து தீயணைப்பு நிலையம், தெற்கு ரதவீதி, சோலை ஹால் ரோடு, கணேஷ் தியேட்டர், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் தகர ஷட்டர்கள், வீடு கடைகளின் முன் படிக்கட்டுகள் என ஏராளமானஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். இந்நடவடிக்கையில் போது அப்பகுதியினர், அதிகாரிகளிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்தனர். மேலும் இதுபோன்று ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவாகினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

The post திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Commissioner ,Maheshwari ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி