×

சிதம்பரம் நகருக்குள் வாகனங்கள் வராமல் ரூ.40 கோடியில் தில்லையம்மன் ஓடையில் சாலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

 

சிதம்பரம், ஜூலை 1: சிதம்பரம் நகர எல்லையில் இருந்து பேருந்து நிலையம் வரை நகருக்குள் வராமல் ரூ.40 கோடி செலவில் தில்லையம்மன் ஓடை சாலையில் மாற்று பாதை அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், சிதம்பரம் நகரில் உள்ள 6 குளங்கள் நகர்ப்புற மேம்பாட்டின் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி அளவில் தூர்வாரி சீரமைக்கும் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது.

சிதம்பரம் நகரத்திற்கு நடராஜர் கோயில், தில்லையம்மன் கோயில் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு தினந்தோறும் சுமார் 60 ஆயிரம் பேர் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. சிதம்பரம் நகரம் நெருக்கடியில் சிக்காமல் நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குறைந்த நேரத்தில் செல்ல மாற்று வழி அமைக்கப்படுகிறது. இரண்டரை கிலோ மீட்டருக்கு தில்லையம்மன் ஓடையில் ரூ.40 கோடிக்கு சாலை அமைத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது.

நகர விரிவாக்கத்தின் அடிப்படையில் நகரின் வெளியே மணலூர் லால்புரத்தில் கூடுதலாக ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.230 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் 15 ஊராட்சிகள் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும். அமைச்சரை நியமிப்பதோ, நீக்குவதோ முதல்வருக்கு உண்டான அதிகாரம். ஆளுநர் அந்த அதிகார ஆயுதத்தை எடுக்கும் போது சட்டத்தின் மூலமாக சந்திப்போம். அமைச்சரை நீக்கம் செய்ததற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஆளுநர் தற்போது பின் வாங்கிவிட்டார், என்றார்.

The post சிதம்பரம் நகருக்குள் வாகனங்கள் வராமல் ரூ.40 கோடியில் தில்லையம்மன் ஓடையில் சாலை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Road Minister ,M.S. ,Dhillayamman Oda ,Chidambaram Nagar ,R.R. K.K. Pannerisselvam ,Chidambaram ,M.S. R.R. K.K. Bannerselvam ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...