×

உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே

ரிதம் -2023 கலாச்சார நிகழ்ச்சிசேலம்: சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில், உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான வருடாந்திர ரிதம்-2023 என்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேலம், சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களில் உள்ள விநாயகா மிஷனின் 21 கல்லூரிகளில் இருந்து சுமார் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டிவி பிரபலங்கள் சுட்டி அரவிந்த், அசார், ரிஹானா மற்றும் விமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதன்மை விருந்தினராக விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவ கல்லூரி வளாக நிர்வாக இயக்குனர் (வளாக வளர்ச்சி) ஸ்ரீகோகுல் கிருஷ்ணன் சரவணன் கலந்து கொண்டார். விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் நாகப்பன், இயக்குனர்கள் டாக்டர் ஜெய்கார், டாக்டர் ஞானசேகர், டாக்டர் சண்முகசுந்தரம், இதணை இயக்குனர் அகடமிக்ஸ் டாக்டர் ராஜன்சாமுவேல்,மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எழில்வேந்தன், துணை முதல்வர் டாக்டர் தீப்தி சாஸ்திரி மற்றும் நுண்கலை கழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. …

The post உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Vinayaka Missions Research Institute Virtual University ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...