×

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தீபிகா – ஹரிந்தர் ஜோடிக்கு தங்கம்

குவாங்ஸூ: ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் தீபிகா பாலிகல் – ஹரிந்தர்பால் சிங் சாந்து ஜோடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.சீனாவின் குவாங்ஸூ நகரில் நேற்று நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஈரான், ஹாங்காங், சீனா அணிகள் பங்கேற்றன. கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில், மலேசியாவின் ரச்சேல் அர்னால்டு – இவான் யுவன் ஜோடியுடன் மோதிய தீபிகா – ஹரிந்தர் இணை 11-10, 11-8 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தீபிகா – ஹரிந்தர் இணை காலிறுதியில் மலேசியாவின் நம்பர் 1 ஜோடி ஐரா அஸ்மான் – ஷபிக் கமல் ஜோடியையும், அரையிறுதியில் பாகிஸ்தானின் தையப் அஸ்லம் – பைஸா ஜாபர் (2வது ரேங்க்) ஜோடியையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தீபிகா – ஹரிந்தர் ஜோடிக்கு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Squash Championship ,Deepika ,Harinder ,Guangzhou ,India ,Deepika Polykal ,Harinderbal Singh Chandu ,Dinakaran ,
× RELATED கல்கி 2898 ஏடி ஜூன் 27ல் ரிலீஸ்