×

மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் கட்டணம் ரத்து: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் மெத்தனால், எத்தனால் கொண்டு இயங்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் பெர்மிட் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் பேட்டரி மூலம் இயங்கும் வாகங்கள், மெத்தனால் மற்றும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகங்களுக்கு பெர்மிட் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க கூறப்பட்டது.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை ஆணையர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் பெர்மிட் இல்லாமல் வாகனங்கள் இயக்குவதில் நடைமுறை சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் இருப்பதால் ஒன்றிய அரசு கடந்த மே 1ம் தேதி பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், மெத்தனால் மற்றும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் சுற்றுலா வாகனங்களுக்கு இந்தியா முழுவதற்கும் ஆன டூரிஸ்ட் பெர்மிட் கட்டணம் இல்லாமல் வழங்கலாம் என அறிவித்தது. எனவே இதை அடிப்படையாக கொண்டு அனைத்து பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள், மெத்தனால் மற்றும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்களுக்கும் (3000 கிலோவுக்கு கீழ் உள்ள சரக்கு வாகனங்களை தவிர) கட்டணம் இல்லாமல் பெரிமிட் வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்தார்.

இதை அரசு கவனாமக பரிசீலனை செய்து போக்குவரத்துத்துறை ஆணையர் கோரிக்கையை ஏற்று பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வாகங்கள், மெத்தனால் மற்றும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு (3000 கிலோவுக்கு கீழ் உள்ள சரக்கு வாகனங்களை தவிர) கட்டணமில்லாமல் பெரிமிட் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post மின்சார வாகனங்களுக்கு பெர்மிட் கட்டணம் ரத்து: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...