×

கடலூர் இளைஞரை மணந்த நார்வே பெண் தமிழ் புருஷன் கிடைக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை!: கடல் கடந்த காதலிலும் தாய்மொழி பாசம்

கடலூர்: கடல் கடந்த காதலால் கடலூர் இளைஞரை நார்வே பெண் மணந்தார். கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். சிவானந்தினியின் குடும்பத்தினர் இலங்கை தமிழர்கள். இருந்தாலும் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே நார்வேயில் குடியேறிவிட்டனர். ஒரே பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28ம் தேதி திருமணம் நடந்தது. தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமகன் குடும்பத்தினரும், நார்வேயில் இருந்து வந்திருந்த மணமகள் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து சிவானந்தினி கூறுகையில், ‘நார்வே தான் பிறந்தேன், வளர்ந்தேன். பாதி தமிழ், பாதி நார்வேஜியன். தமிழ் கலாசாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் புருஷன் கிடைக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. தற்போது கனவு நனவாகியுள்ளது. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது’ என்றார்.

The post கடலூர் இளைஞரை மணந்த நார்வே பெண் தமிழ் புருஷன் கிடைக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை!: கடல் கடந்த காதலிலும் தாய்மொழி பாசம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Balamurugan ,Chemandalam ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை