×

கரூர் மாவட்டத்தில் 12 கல் குவாரிகளுக்கு ரூ.45 கோடி அபராதம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 12 குவாரிகளுக்கு ரூ.44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல் குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில் செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதா? என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வு செய்தனர். இதில் 12 குவாரிகளில் விதி மீறல்கள் கண்டறியப்பட்டது. இந்த 12 குவாரிகளுக்கும் மொத்தம் ரூ.44 கோடியே 65 லட்சத்து 28ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்தில் 12 கல் குவாரிகளுக்கு ரூ.45 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Karur district ,Karur ,Dinakaran ,
× RELATED வெயிலால் பாதிப்பு ஏற்பட்டால் அவசர...