×

அண்ணாமலை பற்றி விமர்சித்த கர்நாடக பாஜ முன்னாள் எம்எல்ஏக்கு நோட்டீஸ்: கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தகவல்

பெங்களூரு: கட்சி சட்ட விதிமுறைகளை மீறி அண்ணாமலை உட்பட கட்சியின் தலைவர்களை விமர்சனம் செய்ததாக முன்னாள் பேரவை உறுப்பினர் எம்.பி.ரேணுகாச்சார்யா உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாஜ ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் லிங்கராஜ் பாட்டீல் தெரிவித்தார்.இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தேர்தல் தோல்விக்கு முன்னாள் முதல்வர் பசவராஜ்பொம்மை, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், அண்ணாமலை உள்பட சில தலைவர்கள் காரணம் என்றும் முன்னாள் எம்எல்ஏ ரேணுகாச்சார்யா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஜிகஜிணகி, பிரதாப் சிம்ஹா, முன்னாள் ஒன்றிய அமைச்சரும் எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல் ஆர்.யத்னால், முன்னாள் அமைச்சர்கள் பிரபுசவுஹான், முருகேஷ் நிராணி, ஈஸ்வர்சிங் தாகூர் உள்பட 11 பேர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தனர். இப்படி கட்சி தலைமைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் விமர்சனம் செய்த 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இன்று (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தோம். முன்னாள் அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்யாவுக்கு மட்டும் விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்என்றார்.

The post அண்ணாமலை பற்றி விமர்சித்த கர்நாடக பாஜ முன்னாள் எம்எல்ஏக்கு நோட்டீஸ்: கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : MLA ,Karnataka Baja ,Anamalai ,Bengaluru ,Annamalai ,Maharashi ,GP ,Renukacharya ,Party Order Action Committee ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்