×

தேசிய மருத்துவர் நாள் தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவர்களை போற்றுவோம்: வைகோ வாழ்த்து

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் நலனைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு முன்களப் பணியாளர்களாக மருத்துவர்கள் பணியாற்றியதை தேசிய மருத்துவர்கள் தினத்தில் நினைவுகூர்வது சமூகக் கடமையாகும். பல காரணங்களால் சராசரி மனித வாழ்க்கையைக் காட்டிலும் மருத்துவர்களின் ஆயுள் காலம் பத்து வயது குறைவாகவே இருக்கிறது என்று புள்ளி விவரம் கூறுவது கவலையளிப்பதாக இருக்கிறது.

எனவே மருத்துவர்களின் சேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். டாக்டர் பி.சி.ராய் 1962ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இயற்கை எய்தினார். அந்த மாமனிதரின் நினைவாக அவர் பிறந்த நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக இந்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.தன்னலமற்ற மருத்துவ சேவை செய்து வரும் மருத்துவர்களுக்கு, 1976 முதல் டாக்டர் பி.சி. ராய் விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர் நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேசிய மருத்துவர் நாள் தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவர்களை போற்றுவோம்: வைகோ வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : National Doctor Day ,Vigo ,Chennai ,VICO ,general secretary of state ,Corona ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்