×

உதவி சிறை அலுவலர் பதவி 59 இடத்துக்கு 26,307 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் இன்று தேர்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு சிறை சார்நிலை பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்த துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) 54 பணியிடங்கள், உதவி சிறை அலுவலர் (பெண்கள்) 5 இடங்கள் என 59 காலி பணியிடங்களுக்கான தேர்வு எழுத 26,308 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 26,307 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடக்கிறது. எழுத்து தேர்வு 38 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்காக 180 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை 12 இடங்களில் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 3210 பேர் எழுதுகின்றனர்.

The post உதவி சிறை அலுவலர் பதவி 59 இடத்துக்கு 26,307 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் இன்று தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Department of Prison and Reform Department of DNBSC ,
× RELATED திருச்சியில் இருந்து சென்னை நோக்கி...