×

கேடிஎம் டியூக் 200

ஆஸ்திரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கேடிஎம், கேடிஎம் டியூக் 200 என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் -ஐ அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 32 எல்இடிக்கள் மற்றும் 6 ரிப்ளெக்டர்கள் கொண்ட ஹெட்லாம்ப் இடம் பெற்றுள்ளது.

இதில் 200 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இடம் பெற்றுள்ளது.

The post கேடிஎம் டியூக் 200 appeared first on Dinakaran.

Tags : KTM ,Austria ,
× RELATED ஆஸ்திரியாவில் வித்தியாசமான பந்தயம்…...