×

கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை: டெல்லி பல்கலை. நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார். முன்னதாக, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். மோடியின் வருகையையொட்டி, 1,000-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி:
டெல்லி பல்கலைக்கழகம் வெறும் பல்கலைக்கழகம் அல்ல இயக்கம். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா பெரும் பங்கைக் கொண்டிருந்தது. 100 ஆண்டு கால அடிமைத்தனம் அதன் கல்வி மையங்களை அழித்து அதன் வளர்ச்சியை முடக்கியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் வெறும் 3 கல்லூரிகள் மட்டுமே இருந்தன, இப்போது 90-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.

தற்போது, ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய அங்கீகாரம் இன்று அதிகரித்து வருகிறது. 2014ல், க்யூஎஸ் உலக பல்கலை தரவரிசையில், 12 இந்திய பல்கலைகள் மட்டுமே இருந்தன. தற்போது 45 பல்கலைக்கழகங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

2014க்கு முன் இந்தியாவில் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

The post கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை: டெல்லி பல்கலை. நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Delhi University ,PM Modi ,Narendra Modi ,
× RELATED நான் வறுமையில் வாடினேன்; ஏழைகளின்...