×

அலையாத்தி தாவரங்களை நடும் திட்டத்தை தொடங்கியது ஈராக்: ஐ.நா வுடன் இணைந்து 40 லட்சம் கன்றுகளை நடும் திட்டம்

ஈராக்: முற்றிலும் வறண்டு பாலைவனமாக மாறியுள்ள தெற்கு ஈராக்கில் பசுமையை கொண்டு வரும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் அவையுடன் கைகோர்த்துள்ளது ஈராக் அரசு. தெற்கு ஈராக்கின் பசுறா மாகாணத்தில் உள்ள கோர் அல் சுபைர் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். பல பத்தாண்டுகளுக்கு முன்பு சதுப்பு நிலங்களாக இருந்த இந்த பகுதி பருவநிலை மாற்றம் கார்பன் உமிழ்வு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் வறண்ட பாலைவனமாக மாறியுள்ளது.

இப்பகுதியில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியாக ஐ.நா வுடன் இணைந்து கோர் அல் சுபைர் பகுதியில் 40 லட்சம் அலையாத்தி தாவரங்களை நடும் முயற்சியில் இணைந்திருக்கிறது ஈராக் அரசு. இதற்காக பஸ்ரா நகரில் ஷெட்டல் அராப் ஆற்றங்கரையில் அலையாத்தி கன்றுகள் வளர்க்கப்பட்டு இங்கு வந்து நடப்படுகின்றன. ஈராக்கின் கார்பன் உமிழ்வு கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்திருப்பதாக உலக வாங்கி கூறியுள்ளது. அண்டையில் உள்ள குவைத், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் இத்திட்டம் பெருமளவில் வெற்றி பெற்றிருப்பதால் தங்களுக்கும் பயன் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது ஈராக்.

 

The post அலையாத்தி தாவரங்களை நடும் திட்டத்தை தொடங்கியது ஈராக்: ஐ.நா வுடன் இணைந்து 40 லட்சம் கன்றுகளை நடும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Alayati ,Iraq ,UN ,United Nations ,southern Iraq ,
× RELATED காந்தியை குறைத்து மதிப்பிட்டு...