×

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர் கோர்ட்டில் ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 180க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இதில் 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவு தடயவியல் ஆய்வகத்தில் இருந்து வரவேண்டியுள்ளது. இந்நிலையில் வேங்கைவயல் பகுதியை சேர்ந்த மேலும் 8 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தனர்.

ஆனால் அந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்தனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனையை எதிர்த்து ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் ஒரு மனுவை கடந்த 27ம் தேதி தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 8 பேரும் ஆஜராகினர். தொடர்ந்து விசாரணை நடந்தது.

The post வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேர் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Venkaiwayal ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை