×

நெல்லையில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

*சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நெல்லை : நெல்லையில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.நெல்லையில் நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி முக்கிய ஊர்களில் பெரிய மைதானங்களில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி கொடுத்தனர்.

நெல்லை டவுண் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நேற்று காலை 7 மணியளவில் நடந்தது. சிறப்பு தொழுகையை மேலப்பாளையம் சித்திக் ஆலிம் நடத்தினார். சிறப்பு தொழுகையில் மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத் இஸ்மாயில், சித்திக் நியமத்துல்லா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அனஸ் ராஜா, கரிம், ரஹிம், ஜாமியா பீர், அன்வர், தமுமுக மாவட்ட துணை செயலாளர் ரசூல் மைதின் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நெல்லை பேட்டை முகமது நயினார் பள்ளிவாசலில் மாநில முஸ்லீம் லீக் துணைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கோதர் முகைதீன், பேட்டை ஜமாத் தலைவர் ப.த.திவான் பக்கீர் முகைதீன், ரகுமான் பேட்டை ஹனிபா, வழக்கறிஞர் மதார் முகைதீன், மேலப்பாளையம் நைனார் முகமது மூப்பன் ஜும்ஆ பள்ளியில் ஜலீல் உஸ்மானி தலைமையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மீரான் முகைதீன், சதக்கத்துல்லாஹ் கல்லூரி கல்விக் குழு உறுப்பினர் நவாப் உசேன், பஜார் பள்ளி பெருநாள் தொழுகையில் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆட்சிக்குழு பொருளாளர் டிஎஸ்எம்ஓ.அப்துல் மஜீத், ஹாமீம் பள்ளிவாசலில் முன்னாள் எம்எல்ஏ விஎஸ்டி சம்சுல் ஆலம், மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர், ஜாஹிர், மில்லத் காஜா, நெல்லை டவுன் பாட்டப்பத்து பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் மாவட்டச் செயலாளர் முகமது அலி, நெய்னார் முஹம்மது கடாபி, பாதுஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் பஜார் திடலில் தமுமுக சார்பில் பக்ரீத் பண்டிகை தொழுகை நடந்தது. தமுமுக, மமக மாவட்ட தலைவரும் 50வது வார்டு கவுன்சிலர் ரசூல்மைதீன், மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மாநில இளைஞரணி பொருளாளர் ரியாசுர் ரஹ்மான், மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் பெஸ்ட் ரசூல், மாவட்ட துணை செயலாளர் காஜா, பகுதி தலைவர் யூசுப் சுல்தான், பகுதி ெசயலாளர் அப்துல்காதர் பாதுஷா, பொருளாளர் அசன் மைதீன், மாவட்ட அணி நிர்வாகிகள் குதா முகம்மது, நாகூர்மீரான், செய்யது அப்துல் காதர், அப்பாஸ், ஷேக் மதார், அஜ்மல்கான், ஆஷிக் பாதுஷா, நாமியா அசன், அப்துல் அஜீஸ். கத்தார் மண்டல பொறுப்பாளர் முகம்மது மைதீன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

மேலப்பாளையம் விரிவாக்கம் கரீம்நகர் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் சார்பில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் பள்ளிவாசல் தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்றுப் பேசினர். பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்தபா ஜாபர் அலி, ஜவகர், தாவூத் ஹாஜியார், முஸ்தபா, செய்னுல்ஆபிதீன், கட்சி நிர்வாகிகள் பொது செயலாளர் கனி, கல்வத், சலீம்தீன், சிந்தா மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.இதேபோல் நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

The post நெல்லையில் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Nella ,Nellai: Bakrit festival ,Nellai ,Pakreet Festival Kolagala Celebration in ,Paddy ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...