×

ஆரல்வாய்மொழி அருகே 4 வழி சாலையை கடக்க முயன்ற அனுமன் குரங்கு வாகனத்தில் சிக்கி காயம்

*தீவிர சிகிச்சை

நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை அனுமன் குரங்கு விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது. குமரியில் அரிய வகையான சிங்கவால் குரங்கு, அனுமன் குரங்கு, தேவாங்கு உள்பட பல வகையான விலங்குகள் உள்ளன. இவை சாலைகளில் சிக்கி காயமடையும், உயிரிழப்பு போன்ற சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை ஆரல்வாய்மொழி அருகே நான்குவழிச்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே அரிய வகையான அனுமன் குரங்கு வாகனத்தில் சிக்கி கால் மற்றும்முகத்தில் காயம் பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதனை கண்டவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் ஜீவகாருண்யா அமைப்பினர் அங்கு வந்து குரங்கை மீட்டு, தோவாளையில் உள்ள ஜீவகாருண்யா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்தில் குரங்கை பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனர். புலியூர்குறிச்சியில் உள்ள உதயகிரி கோட்டை உயிரின காப்பகத்தில் வைத்து பராமரிக்கவும திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஆரல்வாய்மொழி அருகே 4 வழி சாலையை கடக்க முயன்ற அனுமன் குரங்கு வாகனத்தில் சிக்கி காயம் appeared first on Dinakaran.

Tags : Hanuman ,Aralwaimozhi ,Nagercoil ,Aralvaimozhi ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...