×

திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ- என்எல்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ- என்.எல்.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (CATI உரிமம் பெற்றவர்) உடன் திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முயற்சியானது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அதன் மின் கொள்முதல் செலவை மேம்படுத்த உதவுவதோடு, பசுமை மூலமான மின்சாரத்திற்கான அணுகலையும் வழங்கும். இந்திய பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெறப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா, (நிதி) தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் பொது மேலாளர் பி.வாசுகி (வணிகம்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வின் போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ- என்எல்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Metro- NLC ,Chennai ,Metro- N.Y. l. RC ,Chennai Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...