×

இனி பேட்டரி, மெத்தனால், எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் கிடையாது.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை : பேட்டரி மூலம் இயக்கப்படும் பயணிகள் வாகனங்கள், போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்தப்படும் மெத்தனால் மற்றும் எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில், மெத்தனால், எத்தனால் மற்றும் பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் தவிர 3,000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பேட்டரியில் இயங்கும் பயணிகள் வாகனங்கள் மற்றும் மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.ஜூன் 16, 2023 அன்று வழிகாட்டுதல் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது, EV தொழில்துறையைச் சேர்ந்தவர்கள், தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி ராஜா அவர்களிடம் இந்தப் பிரச்சினை குறித்து விளக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.உடனடியாக, முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, பேட்டரியால் இயக்கப்படும் பயணிகள் வாகனங்களை இயக்க வசதியாக ஒழுங்குபடுத்தும் வகையில் உரிய உத்தரவுகளை விரைவில் பிறப்பிக்க அறிவுறுத்தினார்.

The post இனி பேட்டரி, மெத்தனால், எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் கிடையாது.. தமிழக அரசு அரசாணை வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...