×

சமுதாயத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் மதவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் வேண்டாம்: முதல்வர் சித்தராமையா வேண்டுகோள்

பெங்களூரு: சமுதாயத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் மதவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார். பெங்களூரு ,சாம்ராஜ்பேட்டை மைதானத்தில் நடந்த பக்ரீத் தொழுகையில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். இதைத்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது:- பல்வேறு மதங்கள், ஜாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை முதலில் உணரவேண்டும். அனைவரும் பரஸ்பர அன்புடனும் நம்பிக்கையுடனும் வாழ வேண்டும் தற்போது நமக்குள் வெறுப்பை உருவாக்கும் பல சக்திகள் உலவுகின்றன. அந்த சக்திகள் வேண்டுமென்றே தொடர்ந்து சதி செயல்களில் ஈடுபடுகின்றன. மதவாதிகளின் செயல்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் அது அந்த சக்திக்கு உற்சாகத்தை அளிக்கும். எனவே, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும். அனைவரும் அன்புடனும் நம்பிக்கையுடனும் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியுடன் மக்களும் முன்னேற வேண்டும். இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.

The post சமுதாயத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் மதவாத சக்திகளுக்கு முக்கியத்துவம் வேண்டாம்: முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CM ,Sitaramaiah ,Bengaluru ,Chief Sidderamaiah ,CM Siddaramaiah ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...