×

காங். தலைவர் கார்கேவுடன் ஜெர்மனி, ஆஸ்திரேலிய தூதர்கள் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மன் மற்றும் ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பேரி ஓ-பாரெல் ஆகியோர் நேற்று சந்தித்தனர். கார்கேவின் வீட்டில் நடந்த இந்த சந்திப்புகளின்போது இந்தியாவுடனான இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். அப்போது இந்தியாவின் நட்பு நாடுகளின் பட்டியலில் முக்கிய பங்காளியாக ஜெர்மன் இருப்பதாக பிலிப் அக்கர்மன் கூறினார். ஜெர்மன் தூதருடனான சந்திப்பு குறித்து கார்கே தன் ட்விட்டர் பதிவில், “இந்தியா, ஜெர்மன் இடையே பொதுவான ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் ஆழமான உறவு உள்ளது. இது அதிக நம்பிக்கை, பரஸ்பர மரியாதையால் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய உயர் ஆணையருடனான சந்திப்பு பற்றி கார்கே தன் ட்விட்டரில், “இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன. இது இருநாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு, பன்முகத் தொடர்புக்கு அடிப்படையாக செயல்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காங். தலைவர் கார்கேவுடன் ஜெர்மனி, ஆஸ்திரேலிய தூதர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Kong ,President ,Kharge ,New Delhi ,Congress ,Mallikarjuna Kharge ,India ,Philipp Ackermann ,High Commissioner ,Barry ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...