×

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதித்த அரசாணையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழாவை ஒட்டி கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது. இந்நிலையில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில் பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும். தமிழ்நாடு அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது.எனவே, அரசாணை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதித்த அரசாணையை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,Kanakasabe ,Ikort ,Chennai ,Kanakasabh ,Government of Tamil Nadu ,Kanakasabha ,ICORT ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...