×

பக்ரீத் மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் பூக்கள் விலை கடும் உயர்வு

சென்னை: பக்ரீத் மற்றும் முகூர்த்தநாளையொட்டி, கோயம்பேடு மொத்த பூ மார்க்கெட் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலைமைக்கு தகுந்தவாறு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தநாளை முன்னிட்டு நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குறைந்த அளவே பூக்களை வாங்கிச் சென்றனர். வரத்து குறைவு மற்றும் தேவை அதிகமாக இருந்த காரணத்தால் கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் பூக்கள் அனைத்தும் மொத்த மார்க்கெட்டில் இருந்து சில்லறை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

இதனால் பூ மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது. இதுபற்றி கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘விசேஷ நாட்கள், முகூர்த்த நாள் இல்லாததால் கடந்த 7 நாட்களுக்கு முன்பு அனைத்து பூக்களும் குறைந்த விலையில் விற்பனை செய்ததால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்தனர். பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. எனவே, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.’’ என்றார்.

* அரசு நடவடிக்கையால் தக்காளி கிலோ ரூ.50

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த 3 நாட்களாக 35 வாகனங்களில் 350 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 40 வாகனங்களில் 600 டன் தக்காளி வந்தது. இதனால், ஒரு கிலோ ரூ.100 க்கு விற்பனையான தக்காளி ரூ.70 ஆக குறைந்தது. நேற்று முன்தினமும் 43 வாகனங்களில் ரூ.700 டன் வந்த தக்காளியால் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையானது. இதுபோல் மற்ற காய்கறிகளின் விலைகளும் கணிசமாக குறைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையானது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தக்காளி, நேற்று காலை முன்தினம் ரூ.50க்கு விற்கப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

The post பக்ரீத் மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் பூக்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Mukurtha ,Chennai ,Mukurtha day ,Koyambedu ,
× RELATED மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா: கொட்டகை முகூர்த்த விழா தொடக்கம்