×

ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?: ஜூலை 3ல் மோடி ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா, மூத்த கட்சி தலைவர்களுடன் பல மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பாஜ தயாராகி வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற 3ம் தேதி பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?: ஜூலை 3ல் மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Modi ,New Delhi ,Union Home Minister ,Amit Shah ,BJP ,President ,JP Natta ,Dinakaran ,
× RELATED முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக்...