×

ஈரானுடன் இந்தியா த்ரில் வெற்றி ஆசிய சாம்பியன்ஷிப் கபடி: பைனலுக்கு முன்னேற்றம்

பூசன்: ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் ஈரானிடம் த்ரில் வெற்றியை வசப்படுத்திய இந்தியா பைனலுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. தென் கொரியாவின் பூசன் நகரில் 11வது ஆடவர் ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடக்கிறது. இதில் இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தென் கொரியா,தைவான், ஜப்பான் ஆகிய அணிகளை தோற்கடித்தது. தொடர்ந்து தனது 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா நேற்று ஈரான் அணியுடன் மோதியது. கேப்டன் பவன் ஷெரவாத் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியா ஆரம்பித்திலேயே புள்ளிகளை குவித்தது. கூடவே அஸ்லாம், அர்ஜூன் ஆகியோர் கை கொடுக்க இந்தியா முதல் பாதியில் 19-9 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக முன்னிலைப் பெற்றது.

அதனால் இந்தியாவின் வெற்றி உறுதி என்ற எதிர்பார்ப்பு, 2வது பாதியில் மாறியது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கி 10 நிமிடங்களில் ஈரான் 8 புள்ளிகள் சேர்க்க, இந்தியா வெறும் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றது. போதாதற்கு இந்தியாவை ஆல் அவுட் செய்து கூடுதல் புள்ளிகளை பெற்றது ஈரான். ஒருக்கட்டத்தில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்த இந்தியா கடைசி நிமிடங்களில் வெறும் 2 புள்ளி மட்டுமே கூடுதலாக பெற்று இருந்தது. அதனால் ஈரான் வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி நிமிடத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் சுர்ஜித் குமார் போட்ட ‘சூப்பர் டேக்கிள்’ மூலம் இந்தியாவுக்கு 2புள்ளி கிடைக்க இந்தியா வெற்றியை நெருங்கியது. போதாதற்கு கடைசி ரெய்டில் இந்தியா கூடுதலாக ஒருப் புள்ளியை வசப்படுத்தியது. எனவே 33-28 புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தியது. கேப்டன் பவன் மட்டுமே 16 புள்ளிகளை குவித்தார். இந்த 4வது வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

இந்தியா எஞ்சியுள்ள ஒரு லீக் ஆட்டத்தில் இன்று காலை ஹாங்காங் அணியை எதிர்க் கொள்கிறது. வலுவான இந்தியாவை, இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத ஹாங்காங் வெல்லும் வாய்ப்பு மிகவும் குறைவு.  இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு ஈரானுக்கு கூடுதலாக உள்ளது. இருப்பினும் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பான் 57 புள்ளி வித்தியாசத்தில் ஈரானை வீழ்த்தினால் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் இந்தியாவுடன் மோதும்.

The post ஈரானுடன் இந்தியா த்ரில் வெற்றி ஆசிய சாம்பியன்ஷிப் கபடி: பைனலுக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : India ,Iran ,Asian Championship Kabaddi ,Busan ,Asian Championship Kabaddi tournament ,South Korea's… ,Iran Asian Championship Kabaddi ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!