×

வருகின்ற ஆண்டு முதல் மதுரையில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி

சென்னை: அகில இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் சென்னையில் இன்று அளித்த பேட்டி: புனித ஹஜ் பயணத்தில் இந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் இருந்து 18 லட்சத்து 45 ஆயிரத்து 45 நபர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 164 நபர்கள் புனித ஹச் பயணம் மேற்கொண்டனர். இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 421 நபர்கள் இந்திய ஹஜ கமிட்டி சார்பிலும் 34,635 நபர்கள் தனியார் ஹஜ் நிறுவனங்கள் சார்பிலும் ஹஜ் பயணம் பூர்த்தி செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 3954 நபர்கள் புனித ஹஜ் பயணத்தை நிறைவு பெற்று தமிழகம் திரும்ப உள்ளார்கள். மேலும் ஹஜ் பயணம் முடித்து வருகின்ற திங்கட்கிழமை முதல் விமானம் மூலம் புதுடெல்லி வருகின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல் விமானம் ஜூலை 15ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு நமது நாட்டைச் சேர்ந்த 20 ஹாஜிகள் மரணமடைந்துள்ளனர். இதில் ஒரே ஒரு பெண் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.அவர் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். கொரோனா இடைவேளைக்குப் பிறகு இந்த ஆண்டு மட்டுமே ஹஜ் பயணம் முழுமையாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மதுரையில் இருந்தும் ஒரு சில விமானங்களை இயக்கம மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. எனவே மதுரை மாநகரை சுற்றியுள்ள மக்கள் மற்றும் தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான சிறப்பான வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வருகின்ற ஆண்டு முதல் மதுரையில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Haj ,Madurai ,President ,Indian Hajj Association ,Chennai ,All India Hajj Association ,Abupakkar ,Sacred Hajj ,Indian Haj Association ,
× RELATED தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ்...