×

ஒருங்கிணைந்த நீதிமன்ற சாலையில் வளர்ந்துள்ள கற்பூர மரங்களால் விபத்து அபாயம்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள காக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் சாலையில் இருபுறங்களிலும் உள்ள ராட்சத கற்பூர மரங்களால் விபத்து அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, எரிபொருள் மற்றும் இதர தேவைகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்களை நடவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, வனத்துறையினரும் சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் இந்த கற்பூர மரங்களை நடவு செய்தனர். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் சாலையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் கற்பூர மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் இந்த மரங்கள் நெடு நெடுவென வளர்ப்து ஆபத்து நிறைந்ததாக மாறிவிட்டது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த மரங்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இது பருவமழை காலங்களில் விழுந்து போக்குவரத்து தடை ஏற்படுத்துவதும், சில சமயங்களில் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், இவைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் இருந்து காக்காதோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் செல்லும் விசி காலனி செல்லும் சாலையோரங்களில் ஏராளமான கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்களால் விபத்து அபாயம் நீடிக்கிறது. எனவே, இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஒருங்கிணைந்த நீதிமன்ற சாலையில் வளர்ந்துள்ள கற்பூர மரங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kakathoppu ,Dinakaran ,
× RELATED பூங்கா சாலையோர கால்வாயில்...