×

இந்தியாவிலேயே முதல் முறையாக குற்றங்களை தடுக்க ரூ.3.6 கோடியில் ‘டிரோன் போலீஸ் யூனிட்’ மையம் திறப்பு: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தனர்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் குற்றங்களை தடுக்கவும், உயிர்களை காக்கவும் ரூ.3.6 கோடி செலவில் புதிய ‘டிரோன் போலீஸ் யூனிட்’ என்ற அமைப்பை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். சென்னை மாநகர காவல்துறை சார்பில் அடையார் அருணாசலபுரம் முத்து லட்சுமி பார்க் அருகே ‘டிரோன் போலீஸ் யூனிட்’ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக கண்காணித்து குற்றத்தில் ஈடுபடும் வாகனங்களை வகைப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு கொண்ட இந்த டிரோன்களை பயன்படுத்தி குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறை சிறப்பாக செயலாற்றிட முடியும்.

அதேபோல் கடற்கரை பகுதியில் அலைகளில் சிக்கி கொள்ளும் பொதுமக்களை துல்லியமாக கண்காணித்து உயிர் காக்கும் உபகரணங்களை உடனே டிரோன் வழியாக விரைந்து சென்று உயிர்களை காப்பற்ற முடியும். இந்த திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் இன்று ‘டிரோன் போலீஸ் யூனிட்’ மையத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது: தமிழ்நாடு காவல் துறையை நவீனமயமாக்குவது என்பது தமிழ்நாடு முதல்வருடைய கனவு திட்டமாக உள்ளது. அதற்கு இரண்டு விதமான திட்டங்கள் தயாரித்து வழங்கி இருக்கிறார்கள். ஒன்று தொழில் மற்றும் காவல் துறை எதிர்காலங்களில் தொழில்நுட்பத்துடன் இயங்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, டிரோன் போலீஸ் யூனிட் என்ற திட்டத்தை அறிவித்தார்கள்.

அதற்காக ரூ.3.6 கோடி பணத்தை ஒதுக்கினார்கள். இந்த திட்டத்தின் கீழ் தற்போது திறக்கப்பட்டுள்ள ‘டிரோன் போலீஸ் யூனிட்’ 9 டிரோன்களை கொண்ட ஒரு புதிய அமைப்பை காவல்துறையியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று விதமான டிரோன்கள் உள்ளது. அதில் மெரினா கடற்கரை போன்ற இடங்களில் உயிர்காப்பதற்கான அதிக திறன் கொணட் டிரோன்கள் அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய இடத்தில் பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்றாலும் இந்த டிரோன்கள் எடுத்து செல்லும். மற்றொரு குற்றம் நடந்த இடத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும், குற்றவாளிகளை தடுக்க வேண்டும். கண்டுபிடிக்க வேண்டும் இடங்களில் விரைவாக செல்லக்கூடிய டிரோன்கள், மூன்றாவதாக அதிக தொலைவு செல்ல கூடிய டிரோன்கள் என 3 விதமான டிரோன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிறந்த காவல் நிலையத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் குறைந்த நாட்களில் தேர்வு செய்து அமைத்துள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த டிரோன் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ஒரு பொறியாளர், டெலியியல் ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவர். தொழில் நுட்பத்தை தெரிந்த அவரால் இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். தமிழக காவல்துறையில் தொழில் நுட்பம் தற்போது வந்துவிட்டது. அதை காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தற்போது உள்ள காவலர்கள் 80 சதவீதம் பேர் பட்டதாரிகளாக உள்ளனர். 15 முதல் 20 சதவீதம் வரையிலான காவலர்கள் பொறியாளராக உள்ளனர். இதன் புதிய டிரோன்கள் மூலம் குற்றங்கள் குறைக்கப்படும். குற்றங்கள் நடந்தாலும் கூட அதை உடனடியாக கண்டுபிடிப்பதற்கும், குறிப்பாக குற்றவாளிகள் வாகனங்களில் தப்பி சென்றாலும் கூட அவர்களை கண்டுபிடிக்க இது பெரும் உதவியாக இருக்கும். டிரோன் போலீஸ் யூனிட் மட்டும் அல்லாமல், வரும் காலங்களில் சென்னை மாநகர காவல்துறை நிறைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது.

சைபர் கிரைம் பிரிவில் அதிக கவனம் செலுத்தி எந்த மாதிரியான குற்றங்கள் செய்துள்ளனர். இதற்கு மேல் எந்த மாதிரியான குற்றங்களை செய்ய உள்ளனர் என்று திட்டமிட்டு முன்பே தெரிந்து அதை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். எல்லாத்திற்கும் மேலாக உயிர்காப்பதற்கு ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் விபத்துக்களால் ஏற்படக்கூடிய மரணங்களை பெரும் அளவுக்கு குறைக்க இது பெரும் மளவு உதவியாக இருக்கும். எனவே தொழில் நுட்பங்கள் மூலமாக தமிழகத்தில் குற்றங்கள் குறைக்கப்படும், விபத்துக்களை குறைக்கப்படும். விபத்து நடந்தால் கூட உயிர் சேதங்களை தடுக்க முடியும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

The post இந்தியாவிலேயே முதல் முறையாக குற்றங்களை தடுக்க ரூ.3.6 கோடியில் ‘டிரோன் போலீஸ் யூனிட்’ மையம் திறப்பு: டிஜிபி சைலேந்திரபாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : India ,Drone Police Unit ,DGP ,Shailendrababu ,Commissioner ,Shankar Jiwal ,Chennai ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!