×

பக்ரீத் பண்டிகையால் கேரளாவுக்கு காய்கறிகள் ‘கட்’ ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் : பக்ரீத் பண்டிகையால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை. இதனால் நேற்று மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட், தமிழகத்தில் கோயம்பேட்டிற்கு அடுத்தபடியாக பெரிய மார்க்கெட்டாகும். தற்போது இந்த காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் இயங்கி வருகிறது.

இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் காய்கறிகள் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளா, மும்பை, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக கேரளாவிற்கு மட்டும் 80 சதவீத காய்கறிகள் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்படவில்லை. நேற்று உள்ளூர் வியாபாரிகள் மட்டும் காய்கறிகளை கொண்டு வந்திருந்தனர். மேலும் கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் மார்க்கெட்டிற்கு வராததால் மார்க்கெட் அதிகாலை முதலிலே வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் காந்தி மார்க்கெட்டில் நேற்று மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பக்ரீத் பண்டிகையால் கேரளாவுக்கு காய்கறிகள் ‘கட்’ ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Bakrit festival ,Othanchatram ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...