×

3 தேர்தல் வியூகம் வகுக்க பாஜக திட்டம்?.. மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை

டெல்லி: மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. தற்போதையை மக்களவை பதவி காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 18வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ள கட்சிகள், கூட்டணி குறித்த பேச்சுகளையும் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பரப்புரை, வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மண்டலங்களாக பிரித்து 3 தேர்தல் வியூகம் வகுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஜூலை 6ல் கவுகாத்தி, 7ல் டெல்லி, 8ல் ஹைதராபாத்தில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களைவத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜக தலைமை ஜூலை 8ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள ஆலோசிக்கப்பட உள்ளது.

The post 3 தேர்தல் வியூகம் வகுக்க பாஜக திட்டம்?.. மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை 6, 7, 8ல் நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : BJP ,Natta ,Delhi ,Pajka ,Nata ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு