×

2.20 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள்

 

ராசிபுரம், ஜூன் 29: வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டபட்டி ஊராட்சியில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். வெண்ணந்தூர் ஒன்றியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் செம்மாண்டப்பட்டி முதல் நடுப்பட்டி வரை ஏரிக்கரை மீது தார்சாலை அமைக்கும் பணி, ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரர் தெரு பெருமாள் கோயில் வீதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, ரூ.6.35 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரர் தெரு 3வது குறுக்கு தெருவில் கழிவுநீர் கால்வாய், 14.31 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரர் தெருவில் அங்கன்வாடி மையம், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரர் தெரு 2வது வீதியில் கழிவுநீர் கால்வாய், ரூ.49,300 மதிப்பீட்டில் இந்திரா நகரில் தெருவிளக்கு, ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் கட்டும் பணி, ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக், ரூ.157 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளைப்பிள்ளையார் கோயில் முதல் செம்மாண்டப்பட்டி வரை தார்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.20 ேகாடி மதிப்பீட்டில் 9 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், ‘கடந்த 3 தினங்களுக்கு முன் செம்மாண்டபட்டி கிராமத்திற்கு ஆய்வுக்கு வந்தபோது, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை 3 நாட்களில் நிறைவேற்றும் வகையில், இன்று(நேற்று) தார்சாலை, கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம், பொது கழிப்பிடம், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,’ என்றார். பின்னர், ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், ராசிபுரத்திலிருந்து குருசாமிபாளையம், மொஞ்சனூர், ஓ.சௌதாபுரம், வெள்ளைபிள்ளையார் கோயில் வழியாக ராசாம்பாளையம் வரை புதிய வழித்தட அரசு பஸ்சை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, பயணம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ மணிமேகலை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் துரைசாமி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஆதப்பன், கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு, பிடிஓ.,க்கள் பிரபாகரன், வனிதா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

The post 2.20 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Semmandapatti ,Vennandur ,Dinakaran ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...