×

தரம் குறைந்த மீன் விற்ற 2 கடைகளுக்கு அபராதம்

 

தர்மபுரி, ஜூன் 29: பாலக்கோட்டில் தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா, மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆகியோர் தலைமையில், பாலக்கோடு மீன் மார்க்கெட் பகுதிகளில் உள்ள மீன் விற்பனை நிலையங்களில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் வெங்கடேசன், மீன்வள பாதுகாவலர் முருகன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மீன்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், மீன்களில் பார்மலின் கலக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. அதே சமயம், 2 கடைகளில் இருந்த தரம் குறைவான 20 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அந்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, மீன் விற்பனை செய்யும் இடம், வெட்டும் இடத்தை சுத்தமாக பராமரிக்கவும், மீன்களை ஐஸ் பெட்டிகளில் நீண்ட நாள் இருப்பு வைக்காமலும் விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினர். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவர்கள், புதுப்பிக்காதவர்கள் 7 நாளைக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது.

The post தரம் குறைந்த மீன் விற்ற 2 கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Balakot ,Dharmapuri… ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு