×

கடையநல்லூரில் பெண்ணை காதலிக்க வற்புறுத்திய டிரைவர் கைது

 

கடையநல்லூர்,ஜூன் 29: கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (27). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் காதலிப்பதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. ஆனாலும் அந்த பெண்ணை மாரியப்பன் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் கடையநல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாரியப்பனை கைது
செய்தனர்.

The post கடையநல்லூரில் பெண்ணை காதலிக்க வற்புறுத்திய டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Mariyappan ,Muthukrishnapuram, Kadayanallur ,
× RELATED கணவரை பிரிந்து வேறொருவருடன் `பழக்கம்’...